அண்மைய செய்திகள்

recent
-

மாவீரர் தினத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடை மன்னாரில் நீக்கம்

மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு எதிராக அடம்பன் பொலிஸாரால் நேற்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஒன்றை பெற்ற நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கை அடம்பன் பொலிஸார் வாபஸ் பெற்றுள்ளனர் வடக்கு கிழக்கு பகுதிகளில் மாவீரர் தின ஒழுங்கமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்திலே எதிர்வரும் 27 திகதி மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை நேற்றைய தினம் வழங்கியிருந்த நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கை அடம்பன் பொலிஸார் கைவாங்கியுள்ளதாக சட்டத்தரணி செல்வராஜ் டினேஸன் தெரிவித்துள்ளார் 

 அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழர் தாயக பகுதிகளில் உள்ள மாவீரர்களுடைய கல்லறைகள் புதுப்பிக்கப்பட்டு அங்கே திருத்த வேலைகள் இடம் பெற்று வந்த நிலையில் அடம்பன் ஆட்காட்டிவெளி துயிலும் இல்ல திருத்தப்பணிகளும் இடம் பெற்று வந்த நிலையில் மாவீரர் தினத்தை எதிர்வரும் தினங்களில் மன்னார் பிரதேச மக்கள் அனுஷ்டிக்க இருப்பதாகவும் அவ்வாறு பிரதேச மக்கள் இந்த மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் போது மீண்டும் ஒரு இனக்கலவரம் இனங்களுக்கிடையிலான முரண்பாடு இடம் பெறலாம் எனவும் எனவே அதற்கு தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நேற்றைய தினம் அடம்பன் பொலிசாரால் மன்னார் நீதவான் நிதி மன்றத்தில் விண்ணப்பம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது 

 இந்த நிலையில் குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் பிரிவு 106 பிரகாரம் குறித்த வழக்கை ஏற்ற நீதிபதி மாவீரர் தினத்தை அனுஸ்ரிப்பதற்கு 24 திகதி தொடக்கம் 27 திகதிவரை மன்னார் நகரசபை தலைவர் உட்பட 6 நபர்களின் பெயர் குறிப்பிட்டு இடைக்கால தடை ஒன்றை வழங்கியிருந்தார் இந்த நிலையில் இன்றைய தினம் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அடம்பன் பொலிஸ் பொறுப்பதிகாரி இணைந்து நகர்த்தல் பத்திரம் ஊடாக குறித்த வழக்கை மீண்டும் நீதி மன்றத்திற்கு கொண்டுவந்த குறித்த வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்த நிலையில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்காக வழங்கப்பட்ட தற்காலிக தடை உத்தரவு தளர்ட்டப்பட்டுள்ளதாக சட்டத்தரணி டினேஸன் தெரிவித்துள்ளார் அதே நேரம் குறித்த வழக்கின் இறுதி அறிக்கைக்காக இவ்வழக்கு இம்மாதம் 30 திகதி தவனையிடப்பட்டுள்ளது


மாவீரர் தினத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடை மன்னாரில் நீக்கம் Reviewed by Author on November 25, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.