இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்த திட்டம்.
இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். -இன்று ஞாயிற்றுக்கிழமை(6) மதியம் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் முன் வைத்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் 21 ஆம் திகதிக்குள் மீனவப் பிரதிநிதிகள் தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரியும், தமிழக அரசின் துணையோடு மீனவ அமைப்புகள் வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் உலக மீனவர் தினமான 22ஆம் திகதி ரயில் மறியல் போராட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களை ஒருங்கினைத்து மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (6) மதியம் ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.என தெரிய வருகிறது.
இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்த திட்டம்.
Reviewed by Author
on
November 06, 2022
Rating:

No comments:
Post a Comment