அண்மைய செய்திகள்

recent
-

22 மாதங்களின் பின்னர் மீண்டும் ட்விட்டரில் இணைந்தார் ட்ரம்ப்!

டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர், கடந்த 2020 ஆம் ஆண்டு முடக்கப்பட்டது. வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டமைக்காக டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. தற்போது ட்விட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் செல்வந்தர் இலோன் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் ட்ரம்பிற்கு மீண்டும் அவரது ட்விட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா என்பது குறித்த விவாதங்கள் அண்மையில் நிலவிவந்தன. இந்தநிலையில், டொனால்ட் டிரம்பை ட்விட்டரில் மீண்டும் இணைக்கலாமா என்பது குறித்து இலோன் மஸ்க் ட்விட்டரில் வாக்கெடுப்பை நடத்தினார். 

 இந்த வாக்கெடுப்பில் 51.8 சதவீமானோர் ட்ரம்பை மீண்டும் இணைக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கின் தடையை இலோன் மஸ்க் நீக்கியுள்ளார். இதனை, இலோன் மஸ்க் தனது ட்விட்டர் கணக்கின் ஊடாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சுமார் 22 மாதங்களுக்கு பிறகு ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் இயங்குகிறது.


22 மாதங்களின் பின்னர் மீண்டும் ட்விட்டரில் இணைந்தார் ட்ரம்ப்! Reviewed by Author on November 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.