உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகள் இன்று கட்டாரில் ஆரம்பம்
கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ள இந்த விளையாட்டுத் தொடர் வரும் டிசம்பர் 18 வரை 29 நாட்கள் நடைபெற உள்ளது. கட்டாரில் உள்ள 5 முக்கிய நகரங்களில் நடக்க உள்ள இந்த விளையாட்டுத் தொடரில் பிரேசில், ஜெர்மனி மற்றும் நடப்பு சம்பியனான பிரான்ஸ், ஆர்ஜென்டினா, ஸ்பெயின் உட்பட 32 நாடுகள் மோதுகின்றன. இதில் பிரேசில் ஏற்கனவே 5 முறையும் ஜெர்மனி 4 முறையும் சம்பியன் பட்டம் வென்றுள்ளன.
கட்டார் நாட்டு அணி மட்டும் போட்டியில் நேரிடையாக நுழைந்த நிலையில் மற்ற நாடுகள் தகுதிச் சுற்று மூலம் நுழைந்தன. இதுவரை உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெறாத இந்திய அணி இந்த முறையும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. ஆசிய மண்டலத்திற்கான தகுதிச் சுற்றில் இரண்டாவது சுற்றில் வெளியேறியது.
கடும் போட்டி
உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றுவதில் ஐரோப்பிய நாடுகளுக்கும் தென் அமெரிக்க நாடுகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும். 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு முறை கூட தென் அமெரிக்கா வெல்லாத நிலையில் தென் அமெரிக்க ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. தொடக்க நாளான இன்று ‛ஏ’ பிரிவில் உள்ள கட்டார்-ஈகுவடோர் அணிகள் மோதுகின்றன. அல்கோர் நகரில் உள்ள அல்பேத் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. தொடக்க ஆட்டம் நடைபெறும் முன்னதாக ஸ்டேடியத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சி நடக்கவுள்ளது.
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகள் இன்று கட்டாரில் ஆரம்பம்
Reviewed by Author
on
November 20, 2022
Rating:

No comments:
Post a Comment