தனுஷ்கவிற்கு பிணை!
இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் இலங்கை அரசாங்கமும் தனுஷ்க குணத்திலக்கவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவருக்கு பிணை வழங்கப்படாவிட்டால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரலாமெனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்களை பரிசீலித்த நீதவான் 150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணையில் தனுஷ்க குணத்திலக்கவை விடுவிப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட தனுஷ்க குணத்திலக்க தினமும் பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தினமும் இரவு 09 மணி தொடக்கம் மறுநாள் காலை 06 மணி வரை பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளர் தரப்பு தொடர்பில் தொடர்புகளை பேணுவதற்கும் சந்திப்புகளுக்கான செயலிகளை பயன்படுத்தவும் தனுஷ்க குணத்திலக்கவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனுஷ்க குணத்திலக்க இன்று(17) Online ஊடாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தனுஷ்கவிற்கு பிணை!
Reviewed by Author
on
November 17, 2022
Rating:

No comments:
Post a Comment