அண்மைய செய்திகள்

recent
-

சீரற்ற காலநிலை காரணமாக பெண் ஒருவர் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி 40ஆம் கிராமத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பெரிய கல்லாறு பிரதான வீதியை சேர்ந்த நாகமணி பூமலர் என்னும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச கிராம சேவையாளர் தெரிவித்தார்.

 நேற்று மாலை பெரிய கல்லாறில் இருந்து 40ஆம் கிராமத்திற்கு பஸ்ஸில் வந்திறங்கி மயான வீதியால் நடந்து சென்று கொண்டிருக்கும் போதே அவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று காலையே அப்பகுதியால் சென்றவர்கள் சடலத்தினை கண்டு பிரதேச கிராம சேவையாளருக்கு அறிவித்துள்ள நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடுமையான குளிர் மற்றும் மழையுடனான காலநிலை நிலவிவரும் நிலையில் அதன் காரணமாக குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதிக்கு சென்ற வெல்லாவெளி பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


.
சீரற்ற காலநிலை காரணமாக பெண் ஒருவர் பலி! Reviewed by Author on December 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.