அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது!

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள, உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது. ‘ராடிசன் ப்ளூ’ எனப்படும் ஹோட்டலின் வரவேற்புப் பகுதியில், 46 அடி உயரத்தில் மீன் காட்சித் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இது, ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீரால் நிரப்பப்பட்டு, 1,500 வெப்பமண்டல மீன்களால் நிரப்பப்பட்டிருந்தது. இந்த மீன் தொட்டியானது
 நேற்று (வெள்ளிக்கிழமை) திடீரென வெடித்துச் சிதறியது. இதில் தொட்டியில் நிரப்பப்பட்டிருந்த மில்லியன் லிட்டர் நீரும் வெள்ளம் போல் பாய்ந்து வீதிகளில் ஓடியது. இந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

 தகவல் அறிந்து விரைந்து வந்த 100க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள், சிதறிக் கிடந்த கண்ணாடி உள்ளிட்ட அபாயகரமானப் பொருட்களை அகற்றினர். உடனடியாக அந்த கட்டடத்திற்கு அருகில் இருந்த பெரிய வீதியும் மூடப்பட்டது. விபத்திற்கான காரணம் மீன் தொட்டியின் உறைபனி வெப்பநிலை கசிவு எனக் கூறப்படுகிறது. மீன் தொட்டி வெடித்ததை அடுத்து அருகில் உள்ள கடைகள் மற்றும் விடுதிகளில் இருந்தவர்களை வெளியேறும்படி, பொலிஸார் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது! Reviewed by Author on December 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.