அண்மைய செய்திகள்

recent
-

அரசகாணி நிர்வாகம் பிரதேச செயலாளருகாக அல்லது பிரதேச சபை தவிசாளருக்காக வழங்கப்பட்டுள்ளது ?


1992 ம் ஆண்டில் 58 ம் இலக்க அதிகாரப்பரவலாகல் சட்டம் மூலம் பிரதேச செயலாளருக்கு காணி தொடர்பான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பூநகரி பிரதேச சபை தவிசாளராக செயற்படுவபர் தொடர்சியாக பிரதேச செயலாளரின் காணி தொடர்பான அதிகாரங்களில் தொடர்சியாக தலையிட்டு வருகின்றார். 

 முழங்காவில் கிராம அலுவலர் பிரிவில் தனிநபர் ஒருவருக்கு வர்த்தக நோக்கத்திற்காக வழங்கப்பட்ட தாக நிலஅளவை வரைபடத்தில் குறிப்பிட்ட காணி ஒன்றை தனது அரசியல் பிழைப்புகாக வழங்குவதை தடுக்க முற்பட்டமை குறிப்பிடதக்கது. மேலதிக அரசாங்க அதிபரின் வினைத்திறன் அற்ற செயற்பாடே வனவளத்திணைக்களத்திடம் இருந்து பல காணி விடுவிப்புகள் கால தாமதமான உள்ளதாகவும் பலர் விசனம் தெரிவிக்கின்றார்கள். 

 இதேவேளை குறித்த தவிசாளர் முன்னாள் போராளி ஒருவருக்கு சொந்தமான அரசகாணி ஒன்றை அடாத்தாக பிடித்திருக்கும் அதேவேளை தனது அதிகாரத்தை பயன்படுத்தி இக்காணி அடாத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காது தடுத்து வருகின்றார். மேலும் குறித்த தவிசாளர் தனக்கு அதிகாரம் இல்லாத கடலட்டை பண்ணை விவகாரத்தில் தலையிட்டதால் குறித்த தவிசாளருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது



அரசகாணி நிர்வாகம் பிரதேச செயலாளருகாக அல்லது பிரதேச சபை தவிசாளருக்காக வழங்கப்பட்டுள்ளது ? Reviewed by Author on December 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.