மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு நிதி உதவி
மாணவர் ஒருவருக்கு இன்றைய தினம் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.குறித்த மாணவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாய் 2 வருடங்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வறுமை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு தடையாக அமையக்கூடாது என்ற நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
-பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் ஆகியோர் இணைந்து குறித்த உதவிகளைவழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு நிதி உதவி
Reviewed by Author
on
December 19, 2022
Rating:

No comments:
Post a Comment