அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய இழுவை படகு மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் விடுவிப்பு

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய மீன்பிடிபடகு 7 இந்திய மீனவர்களுடன் 2022.11.05ம் திகதியன்று தலைமன்னார் பகுதியில் வைத்து தலைமன்னார் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்ததது. இந்நிலையில் படகில் வந்த மீனவர்களுக்கு ஒத்திவைத்த சிறை தண்டனை வழங்கப்பட்டு மிரிகானா ஊடாக இந்தியா அனுப்பி வைக்கப்படுள்ளார்கள். அதன்பின்னர் குறித்த வழக்கானது படகு உரிமையாளர் விசாரணைக்காக நியமிக்கபட்டிருந்தது. 

 இந்த நிலையைல் குறித்த இந்திய இழுவைப்படகின் உரிமையாளர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் தோன்றி குறித்த படகானது இயந்திர நீர்பம்பியில் ஏற்பட்ட கோளாரு காரணமாக மீனவர்களின் கட்டுப்பாட்டை மீறி இலங்கை எல்லைக்குள் வந்துள்ளதாகவும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லையென்றும் எனவே தனது படகை விடுவித்து தருமாறு சட்டத்தரணி செல்வராஜ டினேஸன் ஊடாக கோரிக்கை விடுத்த நிலையில் படகு உரிமையாளர் விசாரணையில் பின்னர் குறித்த படகை உரிமையாளருக்கு விடுவிக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்



.
மன்னாரில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய இழுவை படகு மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் விடுவிப்பு Reviewed by Author on December 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.