மன்னாரில் மன்னார்,முசலி பிரதேச சபைகளுக்கு சுயேட்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபையில் போட்டியிட தலைமன்னார் மேற்கைச் சேர்ந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து அதிரடியாக முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர்.
இதற்கமைய தங்களது ஊர் மக்கள் சார்பாக சுயேட்சை வேட்பாளர் ஒருவரை களமிறக்க தலைமன்னார் மேற்கைச் சேர்ந்த ஊர் மக்கள் தீர்மானித்துள்ளனர்.
இனியும்,அரசியல் கட்சிகளை நம்பி எந்த பயனும் இல்லை என்ற காரணத்தினாலேயே தற்போது இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் தலைமன்னார் மேற்கைச் சேர்ந்த குழு ஒன்று இன்றைய தினம்(திங்கட்கிழமை) சுயேட்சையாக களமிறங்குவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை முசலி பிரதேச சபைக்கு போட்டியிட இன்றைய தினம்(16) மன்னார் தேர்தல் திணைக்களத்தில் சுயேட்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட பிரிவு காரணமாக தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மன்னாரில் மன்னார்,முசலி பிரதேச சபைகளுக்கு சுயேட்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
Reviewed by Author
on
January 16, 2023
Rating:

No comments:
Post a Comment