மன்னார் திருக்கேதீச்சர ஆலய மகா சிவராத்திரி தின முன் ஏற்பாடு குறித்து அரச அதிபர் தலைமையில் ஆராய்வு.
கடந்த காலங்களில் நோய் தொற்று காரணமாக சிவராத்திரி தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் யாத்திரிகர்கள் வருகை குறைக்கப்பட்டு பல சுகாதார கட்டுப்பாட்டுக்கு மத்தியில் சிவராத்திரி தினம் இடம்பெற்றது.
இம்முறை சிவராத்திரி தினம் பல்லாயிரக்கணக்கான யாத்திரைகள் ஒன்று கூடலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மன்னார் திருக்கேதீச்சர திருத்தலத்தில் சிவராத்திரி தினத்தில் பல லட்சம் யாத்திரிகர்கள் வருகை தர உள்ள நிலையில் ஏற்பாடுகள் முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளும் முன் ஆயுதங்களும் குறிப்பாக சுகாதாரம், போக்குவரத்து ,பாதுகாப்பு, குடிநீர் ,உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
அதற்கான ஏற்பாடுகளும்முன்னெடுக்கப்பட உள்ளது.இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் திருக்கேதீச்சர ஆலய மகா சிவராத்திரி தின முன் ஏற்பாடு குறித்து அரச அதிபர் தலைமையில் ஆராய்வு.
Reviewed by Author
on
January 25, 2023
Rating:

No comments:
Post a Comment