2018ஆம் ஆண்டு 2 வயது சிறுமியைக் கொன்ற விபத்தை மறைத்ததற்காக தந்தையும் மகளும் கைது
சந்தேகநபர்கள் இருவரும் இணைந்து குழந்தையின் சடலத்தை பிரதான வீதியில் வீசி வீதி விபத்தில் உயிரிழந்ததாக நிரூபித்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், பதுளை முத்துமல பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த நான்கு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் விபத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் பதுளை முத்துமல பிரதேசத்தைச் சேர்ந்த 78 மற்றும் 43 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2018ஆம் ஆண்டு 2 வயது சிறுமியைக் கொன்ற விபத்தை மறைத்ததற்காக தந்தையும் மகளும் கைது
Reviewed by Author
on
January 01, 2023
Rating:

No comments:
Post a Comment