இலங்கை கடலில் 900 இடங்களில் எண்ணெய், எரிவாயு ஆய்விற்கு சந்தர்ப்பம்
பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன.
கனிம வளங்களை ஆய்வு செய்தல், முதலீடு செய்தல் தொடர்பான உத்தரவுகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வு மற்றும் முதலீடு செய்வதற்கான கோரிக்கை, வேலைத்திட்ட முன்மொழிவு, அதனை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படும் கால எல்லை ஆகியவை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்போரின் தகுதி, அனுபவம், நற்பெயர் மற்றும் நிதித் திறன் உள்ளிட்ட அறிக்கையும் பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
உரிய தகுதிகளை பூர்த்தி செய்த தரப்பினர் ஒன்றிணைந்த ஆய்வில் இணைய முடியும்.
இலங்கை கடலில் 900 இடங்களில் எண்ணெய், எரிவாயு ஆய்விற்கு சந்தர்ப்பம்
Reviewed by Author
on
January 14, 2023
Rating:

No comments:
Post a Comment