மன்னாரில் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு பாரம்பரிய நெல் வழங்கி வைப்பு.
மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால்(மெசிடோ) கடந்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நஞ்சற்ற பாரம்பரிய நெல் விவசாயிகளிடம் வழங்கப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்பட்ட நெல்லை களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நெல்லில் சுமார் 1800 கிலோ நெல்நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(13) மதியம் பகிர்ந்தளிக்கபட்டுள்ளது.
-மன்னார் மாவட்டத்தில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு,எதிர்வரும் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர்களின் உணவுத்தோவைக்காக குறித்த பாராம்பறிய நெல்லினை உணவுத் தேவைக்காக வைபவ ரீதியாக வழங்கி வைத்துள்ளனர்.
-மன்னார் முருங்கன் பகுதியில் உள்ள நெல் களஞ்சிய சாலையில் வைத்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு சுமார் 1800 கிலோ பாரம்பரிய நெல் பகிர்ந்தளிக்க பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக குறித்த பாரம்பரிய நெல் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் மெசிடோ குழுமத்தினர் இணைந்து வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது
.
.
மன்னாரில் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு பாரம்பரிய நெல் வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
January 14, 2023
Rating:

No comments:
Post a Comment