தேர்தல் பிற்போடப்பட்டால் உள்ளூராட்சி மன்றங்கள் ஆணையாளர்களின் கீழ் கொண்டுவரப்படும் - அமைச்சர் ஜானக வக்கும்புர
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுமாயின், தற்போதுள்ள சட்டத்திற்கமைய உள்ளூராட்சி மன்றங்கள், ஆணையாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
340 உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளின் பதவிக்காலங்களும் எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த மன்றங்களின் பொது நலனை பேணுவதற்கு எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இரு வாரங்களுக்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் சட்டப்பிரிவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் இன்றி உள்ளூராட்சி நிறுவனங்களை நடத்துவதற்கு அமைச்சு இணங்குவதில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Reviewed by NEWMANNAR
on
February 19, 2023
Rating:


No comments:
Post a Comment