அண்மைய செய்திகள்

recent
-

புதிய வைரஸ் தொற்று பரவல்: 9 பேர் பலி

மத்திய ஆபிரிக்க நாடான ஈக்வடோரியல் கினியாவில் மார்பர்க் ( Marburg) என்னும் புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மார்பர்க் வைரஸ் தொற்றுக்கு 9 பேர் உயிரிழந்திருப்பதை ஈக்வடோரியல் கினியா உறுதிப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஈக்வடோரியல் கினியாவின் Kie-Ntem மாகாணத்தில் அறியப்படாத இரத்தக்கசிவு காய்ச்சல் சிலருக்கு பரவியது கண்டறியப்பட்டதும், 200இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த தொற்று காரணமாக அண்டை நாடான கெமரூனும் எல்லைப்பகுதியில் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியது. இந்நிலையில், 9 இறப்புகளுக்கு மேலதிகமாக, ஈக்வடோரியல் கினியாவில் காய்ச்சல், சோர்வு, இரத்தம் கலந்த வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகளுடன் மார்பர்க் வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் 16 பேர் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

 எபோலா, கொரோனா போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. வெளவால்களிலிருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88% இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. இதற்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்லது வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை. Kie-Ntem மாகாணத்தின் Nsok-Nsomo மாவட்டத்தில் நடந்த இறுதிச்சடங்குகளுடன் இந்த தொற்றும் மரணங்களும் தொடர்புபட்டுள்ளதாக ஈக்வடோரியல் கினியாவின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் பெப்ரவரி 7 ஆம் திகதி அறியப்படாத நோய்த்தொற்று குறித்து முறையிட்டிருந்தனர். அவர்கள் செனகலில் உள்ள ஆய்வகத்திற்கு தொற்று மாதிரிகளை அனுப்பி வைத்திருந்தனர். அந்த மாதிரிகளை பரிசோதித்த போது, மார்பர்க் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது

புதிய வைரஸ் தொற்று பரவல்: 9 பேர் பலி Reviewed by Author on February 15, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.