அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நெல்லுக்கு உரிய விலையும் இன்றி விளைச்சலுமின்றி வீதியில் நிற்கும் விவசாயிகள்

மன்னார் மாவட்டத்தில் கடந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்பட்ட காலபோக செய்கையின் அறுவடை தற்போது இடம் பெற்று வருகின்ற நிலையில் ஏக்கருக்கு 30 மூட்டை விளைச்சல் கிடைத்த வயல்களில் இம்முறை 8-15 மூட்டைகளே விளைச்சல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் குறிப்பாக மாந்தை மேற்கு பகுதியில் உள்ள இலுப்பைகடவை,விடத்தல் தீவு,ஆட்காட்டிவெளி கமநல சேவைகள் நிலைய எல்லைக்குள் விவசாய செய்யையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விளைச்சல் இன்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் 

 இம்முறை மாந்தை பகுதியை சேர்ந்த 3900 விவசாயிகள் 15,213 ஏக்கர் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் மஞ்சல் நோய் தாக்கம் போதியளவு நீர் உரிய நேரத்தில் கிடைக்காமை,கிருமிநாசினி,கழைநாசினிகளின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் உரிய விளைச்சல் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர் ஏக்கருக்கு ஒன்றரை இலட்சத்துக்கு மேல் செலவு செய்து விவசாய செய்கையை மேற்கொண்ட நிலையில் ஏக்கருக்கு 50000 குறைவான தொகையே கிடைத்துள்ளதாகவும் ஏக்கருக்கு ஒருலட்சத்துக்கு மேல் நஸ்ரம் ஏற்பட்டுள்ளதாக மாந்தை பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர் காலநிலை பிரச்சினை,உரிய நேரத்துக்கு பசளை கிடைக்காமை,மருந்து விலையேற்றம் என்பவற்றால் இம்முறை கடுமையாக விளைச்சல் குறைவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறிப்பிடுகின்றனர் 

 இம்முறை டீசல் விலை அதிகரிப்பு,பசளை விலை அதிகரிப்பு,கிருமிநாசினி விலை அதிகரிப்பு,வெட்டு கூலி அதிகரிப்பு,உழவு கூலி அதிகரிப்பு என அனைத்தும் விலையும் அதிகரித்துள்ள நிலையில் நெல்லின் விலை மாத்திரம் அதிகரிக்கப்படாமலும் நிர்ணயிக்கப்படாமலும் இருப்பதால் விவசாயத்தை விட்டுவிட்டு கூலி தொழில் செய்ய வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக கோவில் குளம் பகுதியில் விவசாய செய்கையை மேற்கொண்டு பாதிக்கப்பட விவசாயிகள் தெரிவிக்கின்றனர் கடந்த வருடம் உரப்பிரச்சினையால் ஏற்பட்ட நஸ்ரத்துக்கே அரசாங்கம் உரிய நஸ்ர ஈடு வழங்காத நிலையில் இம்முறையாவது சம்மந்தபட்ட அதிகாரிகல் விரைந்து நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற முன்வர வேண்டும் என மன்னார் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

 மன்னாரில் உள்ள பிரதேச செயலகங்களால் நெல் கொள்வனவு இடம் பெற்றாலும் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அவர்கள் நெல்லை கொள்வனவு செய்வதால் விவசாயிகள் தனியார் கொள்வனவாளர்களினால் ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்படுகின்ற குறைந்த விலைக்கே நெல்லை விற்பனை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது






மன்னாரில் நெல்லுக்கு உரிய விலையும் இன்றி விளைச்சலுமின்றி வீதியில் நிற்கும் விவசாயிகள் Reviewed by Author on February 26, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.