அண்மைய செய்திகள்

recent
-

கடமையை புறக்கணித்தார் சவேந்திர சில்வா – விசாரணை நடத்துமாறும் வசந்த கர்னகொட அறிக்கை

கடந்த ஆண்டு மே மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா தவறிவிட்டார் என முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கர்னகொட தலைமையிலான மூவரடங்கிய குழு பரிந்துரை செய்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்த வசந்த கர்னகொட, தயா ரத்நாயக்க மற்றும் ரொஷான் குணதிலக்க ஆகியோர் அடங்கிய குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. 

 அதன்படி கடந்த மே மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே இறுதி பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பில் விசாரணை நடத்துமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களதிற்கு இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.


கடமையை புறக்கணித்தார் சவேந்திர சில்வா – விசாரணை நடத்துமாறும் வசந்த கர்னகொட அறிக்கை Reviewed by Author on February 25, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.