கொழும்பில் கடத்தப்பட்டு இளைஞர் கொலை!
கொழும்பு மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞனை வேனில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர். தெமட்டகொட லக் ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளைஞனை விசாரணைக்குட்படுத்த விரும்புவதாகக் கூறி , ஒரு குழுவினர் கடத்தியதாக தமக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சித்திரவதை செய்யப்பட்டு கொலை
கடத்தப்பட்ட இளைஞன் கடுமையாகத் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, அன்றைய தினம் ஏழு மணியளவில் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக விடப்பட்டுள்ளார். அதன் பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் கடத்தப்பட்டு இளைஞர் கொலை!
Reviewed by Author
on
February 05, 2023
Rating:

No comments:
Post a Comment