துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களுக்கு மன்னாரில் அஞ்சலி.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களுக்கான துயர் பகிர்வு நிகழ்வு இன்று திங்கட்கிழமை (20) காலை 10 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களுக்காக சர்வமத பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டதோடு, உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
-இதன் போது சர்வமத தலைவர்கள் உரை நிகழ்த்தினர்.
குறித்த நிகழ்வில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மன்னார் முச்சக்கர வண்டி சங்க நிர்வாகத்தினர், உறுப்பினர்கள், இளைஞர், யுவதிகள்,மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய மை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர் )
(20-02-2022)
No comments:
Post a Comment