அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கள்ளியடி அ த க பாடசாலை புலமை பரிசில் பாராட்டு விழா -சித்தியடைந்த மாணவனுக்கு தெய்வமணி அறக்கட்டளையால் துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலார் பிரிவு ,மடு கல்வி வலயத்துக்குப்பட்ட மன்னார் கள்ளியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் புலமை பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா-2023 பாடசாலையின்
அதிபர் திருமதி S .வெலிச்சோர் தலைமையில் இன்று (22/03/2023) சிறப்பாக நடைபெற்றது

பலவருடங்களுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்து சித்தியடைந்த மாணவன் டெஸ்மன் டினுசாந்த் அவர்களுக்கு தெய்வமணி அறக்கட்டளையால் துவிச்சக்கர வண்டி அன்பளிப்பாகவும் சிறப்பான புள்ளிகளை பெற்ற மேலும் இரு மாணவர்களுக்கும் தலா ரூபா 10,000 அப்பளிப்பாக லண்டன் தெய்வமணி அறக்கட்டளையால் வழங்கப்பட்டது ,

மேலும் மாணவர்களின் சாதனைக்கு உறுதுணையாக நின்ற ஆசிரியர்களுக்கும் அன்பளிப்பாக ஊக்கிவிப்பு தொகை தெய்வமணி அறக்கட்டளையால் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது ..

இவ்விழாவின் பிரதம விருந்தினராக
மடுவலய கல்விப்பணிப்பாளர் கல்வி அபிவிருத்தி திருமதி வாசுகி சுதாகரும் ,

சிறப்புவிருந்தினர்களாக
திரு S.செல்ரன் யூடிற் (ADE -ஆரப்பக்கல்வி மடுவலயம் ) அவர்களும்
மாந்தை மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி ,திரு G.அந்தோனிப்பிள்ளை
மற்றும்
கள்ளியடி கற்பகவிநாயகர் ஆலயத்தலைவரும் தெய்வமணி அறக்கட்டளை நிறுவனர் திரு வி.முத்துலிங்கம் அவர்களும் கலந்துகொண்டைமை குறிப்பித்தக்கது ..

இவ் விழாவுக்கு முன்னாள் அதிபர்கள்,கள்ளியடி முகாம் இராணுவ தளபதி மற்றும் ஊர்மக்கள் மக்கள் கலந்து கொண்டு மாணவர்களையும் ஆசிரியர்களையும் வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது ..



























































மன்னார் கள்ளியடி அ த க பாடசாலை புலமை பரிசில் பாராட்டு விழா -சித்தியடைந்த மாணவனுக்கு தெய்வமணி அறக்கட்டளையால் துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு Reviewed by Admin on March 22, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.