ஸ்ரீபாத மாவத்தையில் உள்ள இனிப்பு கடையொன்றில் இருந்து ஒரு கிலோ தொதோல் கொள்வனவு செய்த நபர் ஒருவர் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த தொதோலை வீட்டுக்குக் கொண்டு வந்து வெட்டிய போது அதில் முழுவதுமாக செத்த எலி ஒன்று இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கடைக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போது அது நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஸ்ரீ பாத வீதியில் உள்ள கடைகளில் இருந்து உணவு உண்ணும் போது அவதானமாக இருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
.
No comments:
Post a Comment