மதுவிற்பனை நிலையத்திற்கு எதிராக மனு
முழங்காவில் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உணவகத்துடன் கூடிய மதுவிற்பனை நிலையம் திறப்பதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழங்காவில் பொது பொது அமைப்புக்கள் பூநகரி பிரதேச செயலாளரிடம் கடந்த வெள்ளிக்கிழமை மனு ஒன்றை கையளித்தனர்.
பாடசாலைகள்,ஆலயங்கள் ,வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கு இந்த இடம் பொருத்தமற்றது. நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பூநகரி பகுதியில் அமைந்துள்ள மதுவிற்பனை நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு முழங்காவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிலையத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்குமாறு பூநகரி பிரதேச சபையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அமர்வில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Author
on
March 13, 2023
Rating:


No comments:
Post a Comment