தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் நீந்தி கடந்து சாதனை படைத்த ஏழு பேர்
இந்திய-இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து இரண்டு படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் சுஜேத்தா தேப் பர்மன் தலைமையில் மீனவர்கள் உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழுவினர் இலங்கை தலைமன்னார் சென்றனர்.
தலைமன்னாரிலிருந்து இன்று (13) அதிகாலை 5 மணிக்கு கடலில் குதித்து நீந்த தொடங்கிய 7 பேரும் இன்று மாலை 3.45 மணி அளவில் (10 மணி நேரம் 45 நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை வந்தடைந்தார்.
நீந்தி சாதனை படைத்தவர்களை சுங்கத்துறை, மரைன் போலீசார், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் அரிச்சல்முனையில் வரவேற்றனர்.
இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக் ஜலசந்தி கடற்பகுதியை 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேனியைச் சேர்ந்த ஆர். ஜெய் ஜஸ்வந்த் தனது 10 வயதிலும், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையைச் சேர்ந்த ஜியா ராய் என்ற ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி உள்ளிட்ட சிலர் குறைந்த வயதுகளில் நீந்தி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் நீந்தி கடந்து சாதனை படைத்த ஏழு பேர்
Reviewed by Author
on
March 13, 2023
Rating:

No comments:
Post a Comment