தாய், மகள், மருமகள்... ஒரே வீட்டில் மூன்று பெண்களிடம் சாட்டிங் செய்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ!
பாதிரியாரின் லேப்டாப்பில் இருக்கும் பெண்கள் குறித்தும், அவர் வாட்ஸ்அப் சாட்டிங்கில் தொடர்புடைய பெண்கள் குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
பாதிரியாரின் லேப்டாப்பில் இருக்கும் பெண்களில் கல்லூரி மாணவிகள் முதல் திருமணம் ஆன பெண்கள் வரை இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஒரே வீட்டில் வசிக்கும் தாய், மகள், மருமகள் என மூவரிடமும் தனித்தனியாக சாட்டிங்கில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அந்த மூன்று பெண்களுக்கும் மாறி மாறி தெரியாத அளவுக்கு ரகசியமாக சாட்டிங் செய்திருக்கிறார் பாதிரியார்.
அதுமட்டுமல்லாது ஒரு வீட்டிலுள்ள அக்காள், தங்கை ஆகியோருக்கும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி வளைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறதாம். இந்த நிலையில், பாதிரியாரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவுசெய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து குமரி எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் கூறுகையில், "பங்குத்தந்தை பெனடிக்ட் ஆன்றோ சைபர் கிரைம் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். வழக்கு விசாரணைக்கு தேவைப்பட்டால் பாதிரியாரை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதிரியாரின் ஆபாசப் படங்களை வெளியிட்டவர்கள்மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டுவருகிறது. பெண்களின் ஆபாசப் படங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும்" என்றார்.
தாய், மகள், மருமகள்... ஒரே வீட்டில் மூன்று பெண்களிடம் சாட்டிங் செய்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ!
Reviewed by Author
on
March 24, 2023
Rating:

No comments:
Post a Comment