நிலக்கரியுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன
கடன் வசதியின் அடிப்படையில் மேலும் 08 நிலக்கரி கப்பல்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டிற்கு வருகை தந்த இரண்டு கப்பல்களிலும் தலா 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் கூறினார்.
முதலாவது கப்பலுக்கான சகல கொடுப்பனவுகளும் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதனை தரையிறக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடன் வசதியின் அடிப்படையில், மேலும் 30 கப்பல்களை ஏப்ரல் 30 ஆம் திகதிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நிலக்கரியுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன
Reviewed by Author
on
March 17, 2023
Rating:

No comments:
Post a Comment