கோடீஸ்வர வர்த்தகர் கொலை - இருவர் கைது
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி மற்றும் 8 தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டுக்காக வந்த மோட்டார் சைக்கிள் வாத்துவ பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34 மற்றும் 40 வயதுடைய ஜின்மெல்லகஹ பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 48 மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொலைக்கான காரணம் தொடர்பான தகவல்களைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோடீஸ்வர வர்த்தகர் கொலை - இருவர் கைது
Reviewed by Author
on
March 05, 2023
Rating:

No comments:
Post a Comment