அண்மைய செய்திகள்

recent
-

கடல் மணலை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்ய தீர்மானம்!

தேவையான தரத்தில் தயாரிக்கப்பட்ட கடல் மணலை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்ய இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இவ்வருடம் இரண்டு மில்லியன் கனமீற்றர் கடல் மணலை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கழுவி தேவையான தரத்தில் தயாரிக்கப்பட்ட கடல் மணலின் கனசதுரத்தை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யுமாறு இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார். 

 முத்துராஜவெல கடற்கரையிலிருந்து நீர்கொழும்பு வரை 10-15 கிலோமீற்றர் தூரத்தில் கடலில் இருந்து நிலத்திற்கு கடல் மணல் அள்ளப்படும். இந்த கடல் மணல் அகழ்வுத் திட்டத்தினால் கொழும்பிலிருந்து நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் வாழும் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடல் மணலை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்ய தீர்மானம்! Reviewed by Author on March 16, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.