ரயிலுடன் மோதுண்ட கார்; இருவர் பலி
இன்று (16) பிற்பகல் புகையிரதத்துடன் கார் மோதியதில் இடம்பெற்ற பயங்கர விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. விபத்து இடம்பெற்ற விதம் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகி இருந்தது. ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகல்தோட்டை புகையிரத கடவைக்கு அருகில் கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்துடன் கார் மோதியுள்ளது.
காரில் 35 வயதுடைய பேரனும் 80 வயதுடைய அவருடைய பாட்டியும் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அஹங்கம பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் கராபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ரயிலுடன் மோதுண்ட கார்; இருவர் பலி
Reviewed by Author
on
March 16, 2023
Rating:

No comments:
Post a Comment