அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வாழ்வுதயம் சூழல் பாதுகாப்பு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட தனி நபர் உடல் சுகாதாரம் தொடர்பான கருத்தமர்வு.

தனி நபர் உடல் சுகாதாரம் தொடர்பான கருத்தமர்வு வெள்ளிக்கிழமை(21)   காலை 9.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை மன்னார் வாழ்வுதயம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

வாழ்வுதயம் சூழல் பாதுகாப்பு பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு பதில் இயக்குனர் அருட்தந்தை அருள்ராஜ் குரூஸ்  தலைமை தாங்கினார்.

 வைத்தியர் ஜோய் அவர்களினால் இக்கருத்தமர்வானது முன்னெடுக்கப்பட்டது.

 தற்காலத்தில் சிறியோர் தொடங்கி முதியவர்கள் வரை முகம் கொடுக்கும் உடல் சுகாதார பிரச்சினைகள், அவற்றுக்கான காரணங்கள், அவற்றை தவிர்த்து கொள்வதற்கான செயற்பாடுகள் எனப் பல விடயங்கள் இக்கருத்தமர்வில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. 

குறித்த கருத்தமர்வில் சவுத் பார்,கீரி,வேப்பங்குளம், காத்தான்குளம், மடுறோட் ஆகிய இலக்கு கிராமங்களைச் சேர்ந்த பெற்றோர், இளையோர், வாழ்வுதயப் பணியாளர்கள் என 54 பயனாளிகள் பங்குபற்றி பயன் பெற்றுக்கொண்டனர்.   




மன்னார் வாழ்வுதயம் சூழல் பாதுகாப்பு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட தனி நபர் உடல் சுகாதாரம் தொடர்பான கருத்தமர்வு. Reviewed by NEWMANNAR on April 24, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.