அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

மன்னார் மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம் (5) புதன்கிழமை காலை மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

-மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை 11.30 மணியளவில் குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

-பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிள்ளைகள் உள்ளடங்களாக 40 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பாடசாலை உபகரணங்களான புத்தகப்பை,அப்பியாசக் கொப்பிகள்,பாதனி அகியவை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

-குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர்




அருந்தவநாதன் நிரோஜன்,மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


மன்னார் மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு. Reviewed by NEWMANNAR on April 05, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.