மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் 64 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விளையாட்டு விழா
மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 64 வருட பூர்த்தியை முன்னிட்டு மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்வு மற்றும் சாதனையாளர் கெளரவிப்பு நிகழ்வு 13,14,15 திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்றது
அதன் இறுதி நிகழ்வு நேற்று காலை தொடக்கம் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது குறித்த நிகழ்வில் இப் பாடசாலையில் கல்வி கற்று தேசிய சர்வதேச ரீதியில் சாதனை நிகழ்த்திய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது
அதே நேரம் பழைய மாணவர்களுக்காக இடம் பெற்ற போட்டி விளையாட்டுக்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழுவினருக்கு பரிசீல்களும் வழங்கி வைக்கபட்டன
குறித்த நிகழ்வில் சித்திவிநாயகர் இந்து கல்லூரி அதிபர்,பிரதி அதிபர்,ஆசிரியர்கள்,தேசிய மற்றும் சர்வதேச சாதனையாளர்கள் மற்றும் பழையமாணவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்
மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் 64 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விளையாட்டு விழா
Reviewed by NEWMANNAR
on
May 16, 2023
Rating:

No comments:
Post a Comment