மடு பிரதேச அரச உத்தியோகத்தர்களுக்கு சூழல் பாதுகாப்புக் கருத்தமர்வு.
வாழ்வுதயம் சூழல் பாதுகாப்பு பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மடு பிரதேச செயலாளர் பீட் நிஜா கரன், அலுவலக உத்தியோகத்தர் அ.செ.டல்மேடா, கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என 40 வரையான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.
கறிராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்தந்தை செ.அன்ரன் 'இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி உரையாற்றினார்.
மன்னார் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி.அருள்மலர் அந்தோனிப்பிள்ளை 'உலக வெப்பமாதல், கழிவு முகாமைத்துவம்' தொடர்பான கருத்துரையினை வழங்கினார்.
இறுதியில் பொதுக் கலந்துரையாடலுடன் இந்நிகழ்வு நிறைவுற்றது.
மன்னார் நிருபர்
(15-05-2023)
மடு பிரதேச அரச உத்தியோகத்தர்களுக்கு சூழல் பாதுகாப்புக் கருத்தமர்வு.
Reviewed by NEWMANNAR
on
May 15, 2023
Rating:

No comments:
Post a Comment