மன்னார் மாவட்டம் தொடர்பிலான ஆராய்ச்சி தொகுப்பு மாவட்ட அரசங்க அதிபரிடம் கையளிப்பு
மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை,பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் மனநல நீதியான பிரச்சினைகள் தொடர்பில் கடந்த மூன்று வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொகுப்பு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேலிடம் வைபவரீதியாக கையலிக்கப்பட்டுள்ளது
சிரேஸ்ர சமூக செயற்பாட்டாளர் பேதுரு பெனடிக்ற் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆய்வு மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த ஆய்வு தொகுப்பின் இறுதி வடிவம் மேற்படி வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது
குறித்த ஆய்வு தொகுப்பில் மாவட்ட ரீதியாக பெண்கள் எதிர் கொள்ளும் பால் நிலை சார் வன்முறைகள் தொடர்பிலும் பால் நிலை வன்முறைகள் தடுப்பு தொடர்பில் கையாளப்படவேண்டிய அணுகு முறை தொடர்பிலும் அறிக்கைபடுத்தப்பட்டுள்ளது
அதே நேரம் மன்னார் மாவட்டத்தின் புராதான இடங்கள் மற்றும் மாவட்டத்தில் வழக்கொழிந்து செல்லும் பாரம்பரிய தொழில் முறைகள் தொடர்பிலும் பல வகையான தரவுகள் குறித்த ஆய்வு கையேட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது
மன்னார் மாவட்டம் தொடர்பிலான ஆராய்ச்சி தொகுப்பு மாவட்ட அரசங்க அதிபரிடம் கையளிப்பு
Reviewed by NEWMANNAR
on
May 26, 2023
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 26, 2023
Rating:




No comments:
Post a Comment