செங்கோல் சிறப்பு! தமிழகத்தின் பெருமை.
பதிணென் சைவ ஆதீனங்களின் முதன்மையானதும் மிகத் தொன்மையானதுமாக விளங்ககூடிய திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிக பராமாசாரிய சுவாமிகள் அவர்கள் இன்று பாரத பிரதமர் மாண்புமிகு. நரேந்திர மோதி அவர்களிடம் செங்கோல் வழங்கியருளினார்கள்.
"அடியார்கள் வானில் அரசாள்வார் ஆணை நமதே!" - காழிப் பிள்ளையார்.
"தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே."
பொழிப்புரை:
"தேன் பொருந்திய பொழில்களைக் கொண்டதும், கரும்பு, விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும், வளரும் செம் பொற்குவியல் எங்கும் நிறைந்திருப்பதும், நான்முகனால் முதன்முதல் படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன் வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லான் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை".

No comments:
Post a Comment