சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் .
குர்ஆன் மனனமிடும் இஸ்லாமிய பல்கலைக்கழகமான தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் பரீட்சைகளில் திறமை சித்தி பெற்ற மாணவர்கள், சிறந்த வரவை பேணிய மாணவர்கள் உட்பட பல்வேறு துறைகளில் சாதித்த மாணவர்கள் மற்றும் இவ்வாண்டுக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இருதய நோய் விசேட வைத்திய நிபுணர் அல்ஹாபிழ் டாக்டர் எம்.ஏ. நௌசாத் அலி கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தார். மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.கே. சனூஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் என்.எம்.றிஸ்மீர் ஆகியோர் கலந்துகொண்டார். நிகழ்வின் விசேட உரையை சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் தவிசாளர் சட்டத்தரணி மௌலவி என்.எம்.ஏ. முஜீப் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் உலமாக்கள், பாடசாலை அதிபர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் நிர்வாகிகள், ஆளுநர் சபை உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் .
Reviewed by Author
on
May 28, 2023
Rating:

No comments:
Post a Comment