அண்மைய செய்திகள்

recent
-

கோடிக்கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை, பரீட்சை செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிக்கல்

பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இரண்டு பிரதான பரீட்சைகளில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்கு செலுத்த வேண்டிய முழுத் தொகையும் செலுத்தப்படாமை எதிர்வரும் பரீட்சைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று எச்சரித்துள்ளது.


கடந்த காலத்தில் இடம்பெற்ற சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளில் கடமையாற்றிய அதிகாரிகளுக்கு பரீட்சை கடமைகளுக்காக செலுத்தப்படாத தொகை சுமார் 250 கோடி ரூபா என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் பரீட்சை நீண்ட கால தாமதத்திற்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் வாக்குறுதியளித்தபடி கடமைகளில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு முன்பணம் செலுத்தாமையால், மே 15ஆம் திகதி சுமார் 13 நிலையங்களில் கடமைகள் ஆரம்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“முற்பணத்தை இன்றும் நாளையும் செலுத்துவோம் என பரீட்சை திணைக்களம் உறுதியளித்தது. உறுதியளித்தபடி முற்பணத்தை வழங்காவிட்டால் கடமைகளும் பாதிக்கப்படும்.”

2022ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தேசியப் பரீட்சைகளில் பல செயற்பாடுகள் பல காணப்படுன்ற நிலையில், அவை நீண்டகாலமாக தாமதமாகி வரும் நிலையில், பரீட்சை கடமைகளுக்கு பணம் செலுத்தாமையால் அந்த கடமைகள் மேலும் தடைப்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஏற்கனவே இடம்பெற்ற பரீட்சைகளின் கடமைகளுக்கான கொடுப்பனவுகளை மிக விரைவாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் மற்றும் பரீட்சைகள் ஆணையாளரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. 

கோடிக்கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை, பரீட்சை செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிக்கல் Reviewed by NEWMANNAR on May 16, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.