அண்மைய செய்திகள்

recent
-

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து தலைமன்னாரை வந்தடைந்து சாதனை படைத்த மட்டு.மிக்கேல் கல்லூரி மாணவன்

 மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவனும்,ஜனாதிபதி சாரணர் விருது பெற்றவருமான  தேவேந்திரன் மதுஷிகன்  (வயது-20)    பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.


இன்று (28) அதிகாலை 1 மணியளவில் தனுஷ்கோடியிலிருந்து தலை மன்னாரை நோக்கி தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்த தேவேந்திரன் மதுஷிகன்  பிற்பகல் 03.05 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள சுமார் 30 கிலோ மீற்றர் தூரத்தை பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி  டிமேல்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி  கலாமதி பத்மராஜா , மன்னார் மாவட்ட சாரணர் இயக்க ஆணையாளர் ஸ்ரான்லி டிமேல் லெம்பேட்  ,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம்,சாள்ஸ் நிர்மலநாதன் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)  மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞ.அன்ரனி டேவிட்சன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்த ,ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் ,தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன்ராஜ்,ஏ.கே.ஆர்.நிறுவன பணிப்பாளர் றொஜன் உட்பட பலரும் கலந்து கொண்டு வரவேற்றனர்












.
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து தலைமன்னாரை வந்தடைந்து சாதனை படைத்த மட்டு.மிக்கேல் கல்லூரி மாணவன் Reviewed by NEWMANNAR on May 28, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.