மன்னார் மாந்தை மேற்கில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 15 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மருத்துவ தேவைகளை நிறைவேற்ற முடியாத 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் நலன் கருதி விசேட மருத்துவ முகாம் இடம் பெற்றது
டெவ்லிங் நிறுவனத்தின் அனுசரனையில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் குறித்த இலவச மருத்துவ முகாம் இன்று சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் மன்னார் கருங்கண்டல் பாடசாலையில் இடம் பெற்றது
குறித்த நிகழ்வின் மாந்தை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்,அருட்தந்தையர்கள்,வைத் தியர்கள் தாதியர்கள் உட்பட 15 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட முதியவர்கள் கலந்து கொண்டனர்
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட முதியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை உட்பட சக்கரநாற்காலி ஊன்று கோல் வழங்கப்பட்டதுடன் மருத்துவ ஆரோக்கியம் தொடர்பிலான விழிப்புணர்வு செயற்பாடுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது
மன்னார் மாந்தை மேற்கில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்
Reviewed by Author
on
May 27, 2023
Rating:

No comments:
Post a Comment