அண்மைய செய்திகள்

recent
-

வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய நிர்வாகத்தினர் எதிர்நோக்கி வந்த பாதை பிரச்சினையை தீர்த்து வைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் .

 முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்றைய தினம் புதன்கிழமை (31) குறித்த  பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.


ஆலயத்தின் உற்சவ  காலத்தில் தீர்த்தம் எடுத்து செல்வதற்கான பாதை ராணுவ உயர் பாதுகாப்பு வலையத்தினுள் அமைந்துள்ளது.

அப்பகுதிக்குச் சென்று தீர்த்தம் எடுப்பதற்குரிய அனுமதி பல  வருடங்களாக இராணுவத்தினரால் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

ஆலய நிர்வாகத்தினர் இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பிரகாரம் இன்றைய தினம் (31) சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் சகிதம் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.

மக்கள் எதிர்கொள்ளும் இடர்கள் தொடர்பாகவும் இப்ப கதையின் தேவை தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராணுவ கட்டளை அதிகாரி க்கு தெளிவுபடுத்தியதன்  பிரகாரம் இனி வரும் காலங்களில் இடையூறு இன்றி தீர்த்தம் எடுப்பதற்குரிய அனுமதி  மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி யாரால் வழங்கப்பட்டது.
 
இது தொடர்பான அனுமதி எழுத்து மூலம் வழங்கப்படும் எனவும் ராணுவ உயர் அதிகாரி தெரிவித்தார்.

மீள்குடியேற்றத்தின் பின்பு தொடர்ச்சியாக இப்பகுதி மக்கள் எதிர் கொண்டு வந்த இப்பிரச்சனையை பாராளுமன்ற உறுப்பினர்  தீர்த்து வைத்தமைக்கு அப்பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்












.
வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய நிர்வாகத்தினர் எதிர்நோக்கி வந்த பாதை பிரச்சினையை தீர்த்து வைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் . Reviewed by Author on May 31, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.