மன்னாரில் இராணுவத்தினரால் இரத்த தானம் செய்து வைப்பு.
மன்னார் தள்ளாடி இராணுவ 54 ஆவது படைப்பிரிவு மற்றும் 543 வது படைப்பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த இரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை (9) மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்ட குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
54 வது படைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட மற்றும் 543 வது காலாட்படை படைத் தளபதி பிரிகேடியர் துஷார ஹரஸ்கம ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்ற இரத்ததான நிகழ்வில் இராணுவத்தினர் கலந்து கொண்டு இரத்தானம் செய்து வைத்தனர்.
மன்னாரில் இராணுவத்தினரால் இரத்த தானம் செய்து வைப்பு.
Reviewed by Author
on
June 11, 2023
Rating:
.jpeg)
No comments:
Post a Comment