கோழி, முட்டையின் கட்டாய விலை குறைப்பு குறித்து புதிய திட்டம்!
முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான விலை அதற்கான செலவுகள் தொடர்பில் விரைவில் ஆய்வுகளை மேற்கொள்ள விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் தற்போது முட்டை மற்றும் இறைச்சிகோழி இறைச்சியின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவும், முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கவும் உள்ளூர் கோழிப்பண்ணை தொழில்துறையின் உடன்படிக்கையுடன் கூடிய யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் அதிகபட்ச சில்லறை விலையை விதிப்பது குறித்தும், தேவைப்பட்டால் வெளிநாடுகளில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது குறித்தும் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கடுமையான விதிகளின் அடிப்படையில் கோழி இறைச்சி விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காலநிலை காரணமாக தொழில் தடைபட்டுள்ளதால் கோழி இறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment