அண்மைய செய்திகள்

recent
-

7 பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜூன் 23 வரை விளக்கமறியல் !

பொலிஸ் காவலில் இருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பொலிஸ் உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் 7 அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றிய ஹிக்கடுவையைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பின்னர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


 

7 பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜூன் 23 வரை விளக்கமறியல் ! Reviewed by Author on June 09, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.