275 கடவுச்சீட்டுகளை சேகரித்து வைத்திருந்த ஒருவர் கைது
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் இருந்து 275 கடவுச்சீட்டுகளை சேகரித்து வைத்திருந்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியில் இயங்கிவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே கடவுச்சீட்டுக்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக இடம்பெறும் மோசடிகளுக்கு இலக்காக வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
275 கடவுச்சீட்டுகளை சேகரித்து வைத்திருந்த ஒருவர் கைது
Reviewed by Author
on
June 11, 2023
Rating:
.jpg)
No comments:
Post a Comment