மன்னாரில் திடீர் என தீப்பற்றி எரிந்த வாகனம் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி
மன்னார் முருங்கன் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் இன்றைய தினம் புதன் கிழமை வாகனம் ஒன்று முழுமையாக பற்றியெறிந்த நிலையில் சாரதி மற்றும் உதவியாளர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்
மன்னார் மதவாச்சி பிரதான வீதி இசைமாலைத்தாழ்வு பகுதியில் வியாபார பொருட்களுடன் மன்னார் நோக்கி பயணித்த சிறிய ரக பட்டா ரக வாகனத்தின் இஞ்சின் பகுதி திடீர் என தீப்பற்றிய நிலையில் வாகன சாரதி மற்றும் உதவியாளர் துரித கதியில் வாகனத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்
வெளியேறிய சற்று நேரத்தில் வாகனம் முழுவது தீபரவல் ஏற்பட்டும் முழுமையாக வாகனம் எரிந்து நாசமாகியுள்ளதுடன் சரதியியும் உதவியாளரும் எந்த வித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்
மன்னாரில் திடீர் என தீப்பற்றி எரிந்த வாகனம் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி
Reviewed by Author
on
June 14, 2023
Rating:

No comments:
Post a Comment