அண்மைய செய்திகள்

recent
-

61 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எதிர் பார்த்த அளவில் மீன்பாடு-எனினும் மீன்களுக்கு உரிய விலை இல்லை.

 61 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவில் மீன்பாடு-எனினும் மீன்களுக்கு உரிய விலை இல்லை.


(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் )

(18-06-2023)


61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து மீன் பிடிக்க  சென்ற ராமேஸ்வரம்  பகுதி மீனவர்கள் வலையில் எதிர்பார்த்த மீன் பாடுகள் கிடைத்தாலும் இறால், நண்டு, மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

 மீனவர்கள் பிடித்து வந்துள்ள இறாலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய மீனவர்கள் அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து  ராமேஸ்வரம்,மண்டபம்,தொண்டி, திருவாடானை உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் இருந்து சுமார் 1500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்  இன்று (18) அதிகாலை முதல் கரை திரும்பினர்.. மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதி  மீனவர்கள்  எதிர்பார்த்த இறால், நண்டு,கணவாய் போன்ற விலை உயர்ந்த மீன்கள் அதிக அளவு  கிடைத்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் ஒரு சில படகுகளுக்கு எதிர்பார்த்த  மீன் பாடு இல்லாமல் கரை திரும்பினர்.

டீசல் விலை உயர்வு மற்றும்  மீன்பிடி சாதனங்கள் விலை உயர்வு என கடும் சிரமத்திற்கு மத்தியில் மீன் பிடிக்க சென்ற  மீனவர்கள் தங்கள் பிடித்து வந்த இறால் மற்றும் நண்டு மீன்களுக்கு  தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து கொண்டு  உரிய விலை நிர்ணயம் செய்யாமல்  கொள்முதல் செய்வதால் மீனவர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

இதனால் 61 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவு மீன் வரத்து கிடைத்தாலும் விலை இல்லாததால் கவலை அடைந்துள்ளனர்.

இதனால் கரை திரும்பிய விசைபடகுகள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, மத்திய மாநில அரசுகள் தினசரி தங்கத்துக்கு விலை நிர்ணயம் செய்வது போல் இறால் மீனுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் அதே போல் தற்போது மீனவர்கள் பிடித்து வந்துள்ள மீன்களுக்கு தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் உரிய விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.








61 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எதிர் பார்த்த அளவில் மீன்பாடு-எனினும் மீன்களுக்கு உரிய விலை இல்லை. Reviewed by Author on June 18, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.