பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றமா?-இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கம்
சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என அகில இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 25 சதவீதமானோரே சமையல் எரிவாயு மூலம் பேக்கரி உற்பத்திகளை மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக,பேக்கரி உணவு உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சமையல் எரிவாயு விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களில் விலைத்திருத்தங்களை தமது சங்கம் மேற்கொள்விலை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றமா?-இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கம்
Reviewed by Author
on
June 05, 2023
Rating:

No comments:
Post a Comment