சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரித் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் அனுமதிக்கு சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரித் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் அனுமதிக்கு சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரிச் சட்டத்திற்கான திருத்தப்பட்ட சட்டமூலத்தை தயாரிப்பதற்கு கடந்த ஜனவரி 30 ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டது.
இதேவேளை, மத சுதந்திரத்தை இழப்பதையும், மத விடயங்களை திரிபுபடுத்துவதை தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தவும் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, சம்பந்தப்பட்ட குழுவில் அனைத்து மதங்களின் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் ஊடகங்கள் மற்றும் சிவில் சமூக செயற்பட்டாளர்கள் உள்ளடக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment