அண்மைய செய்திகள்

recent
-

இறந்தவரின் சிறுநீரகத்தினை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன்வர வேண்டும்

 மூளைச்சாவடைந்து இறந்தவரின் சிறுநீரகத்தினை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன்வர வேண்டும் என சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் கேட்டுக்கொண்டார்.

சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைத்தியர்கள் – சட்டத்தரணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் போட்டி தொடர்பான ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், “திடீரென ஏற்படும் விபத்து மற்றும் சில நோய் காரணமாக மூளை சாவடைந்து இறந்தவர்களின் இதயம் சில மணி நேரங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களது சிறுநீரகத்தினை அறுவைச் சிகிச்சை மூலமாக தேவைப்படும் ஒருவருக்கு பொருத்த முடியும்.

அவ்வாறு சிறுநீரகம் தேவைப்படுகின்ற ஒருவருக்கு பொருத்துவதற்கு மூளை சாவடைந்து இறந்தவரின் உறவினர்கள் முன்வந்தால் இன்னொரு உயிரை காப்பாற்றும் சந்தர்ப்பம் ஏற்படும். எனவே அவ்வாறு சிறுநீரகத்தை தானம் தருவதற்கு பொதுமக்கள் முன் வர வேண்டும்.

எனவே இது தொடர்பான விழிப்புணர்வு பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் ஏனைய பொதுமக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி பிற உயிரை வாழ வைக்கும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்த முனவர வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.


இறந்தவரின் சிறுநீரகத்தினை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன்வர வேண்டும் Reviewed by Author on June 14, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.